தற்போதைய காலகட்டத்திலும் சரி நல்லாட்சி காலகட்டத்திலும் சரி காணி அபகரிப்பு அதிகரித்தே செல்கின்றது.
கொரோனாவை பயன்படுத்தி இராணுவ நில அளவையாளர்கள் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக பல தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் 3குடும்பங்களுக்கு உரித்தன 4 ஏக்கர்
காணியை அபகரிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.
அக்குடும்பங்களுக்கு உரித்தான காணியை 16வது காலாட்படையின் தேவைக்காவே காணி அபகரிப்பு இடம்பெறுகின்றது என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காணி அளவீடு இடம்பெறுவதையடுத்து மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதில் தமிழ் அரசியில் பிரதிகளான எம். கே சிவாஜிலிங்கம் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சம்ப இடத்திற்கிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.


