30 பிக்கு மாணவர்களுக்கு கொரோனா

பிக்கு மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டி- ஹந்தானை பிரதேசத்திலுள்ள பௌத்த பிரிவெனா ஒன்றில் கல்வி கற்று வரும் 30 பிக்கு மாணவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.

இதனை கண்டி மாவட்ட சுகாதார வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பிரிவெனாவில் 60 பிக்கு மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற காரணத்தினால், தொற்றுக்குள்ளான 30 பேருக்கும் பிரிவெனாவிலேயே சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply