ரிஷாட்டின் மைத்துனருக்கு பிணை

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணியாற்றியிருந்த யுவதியொருவர், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.

Leave a Reply