
கல்முனை நகரில் இரவோடு இரவாக சட்ட விரோதமாக முளைத்த வியாபார நிலையம் – களத்தில் இளைஞர் சேனை

கல்முனை மாநகர முற்சந்தியில் சட்டவிரோதமான முறையில் பாதைசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபார நிலையயம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இன்று காலை குறித்த இடத்திற்கு கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் க.சிவலிங்கம் ஆகியோர் சென்றிருந்தனர். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் கல்முனை மாநகர சபைக்கும் முறைப்பாட்டை செய்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்ர்களும் கல்முனை மாநகர சபை ஆணையாளரும் வருகைதந்து ஆராய்ந்தபோது குறித்த வியாபார நிலையம் பாதைசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதால் இதனை இன்று இரவுக்கு முதல் அகற்றறுமாறும் இவ்வாறு அகற்றாதபட்சத்தில் சட்ட நடிவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.




