நிலைத்த மீள்குடியேற்றத்திற்கான உதவித்திட்ட மீளாய்வு கலந்துரையாடல்

Offer Ceylon அரசார்பற்ற நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற நிலைத்த மீள்குடியேற்றத்திற்கான உதவித் திட்டத்தின் கீழ் ஒன்றினைந்த சமாதானத்திற்கூடான நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, மீள்குடியேறியவர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்குதல் திட்ட முடிவின் முன்னேற்ற அறிக்கை கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 10..மணிக்கு சிறிய மாநாட்டு மண்டபத்தில் Zoom செயலி ஊடாக இடம்பெற்றுள்ளது.

குறித்த திட்டமானது பெண்களை மையமாகக் கொண்ட குழுக்களை வலுப்படுத்தல், குடிநீர்த் திட்டம், ஆவணங்கள் மற்றும் COVID தொடர்பான விழிப்புணர்வு, சட்ட ரீதியான ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதார உதவிகள் வழங்கல் என்பவற்றை உள்ளடக்கியதாக 15.12.2020ம் திகதி தொடக்கம் 31.12.2021ம் வரையான காலப்பகுதியை கொண்டதாக கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், Offer Ceylon நிறுவன உத்தியோகத்தர்கள் நேரடியாகவும் மற்றும் பிரதேச செயலாளர்கள், குறித்த திட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவன உத்தியோகத்தர்கள் செயலியூடாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply