<!–
அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களின் விபரங்கள்
- கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
- டலஸ் அழகப்பெரும- ஊடகத்துறை அமைச்சர்
- ஜீ.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சர்
- தினேஸ் குணவர்தன- அமைச்சர்
- பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து அமைச்சர்
- காமினி லொக்குகே- மின்சக்தி அமைச்சர்
- நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.



