
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிஷாட்டின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய யுவதியை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அந்த வீட்டில் பணியாற்றிய டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே, அவ்வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு யுவதியும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.

