கற்கோவளத்தில் காணி சுவீகரிப்பு மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

கற்கோவளத்தில் படையினரின் தேவைக்காக காணி சுவீகரிக்கும் பொருட்டு இன்றைய தினம் (16) இடம்பெற்றிருந்த அளவீட்டுப் பணிகள் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை- கற்கோவளம் பகுதியில் உள்ள 3 குடும்பங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் காணியை 16 ஆவது காலாட்படையின தேவைகளுக்காக அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இன்று காலை (16) மேற்படி காணியினை அளவீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இதையறிந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து காணியை அளவீடு செய்யாது நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Leave a Reply