வன்னி மாவட்டத்தில் காணப்படுகின்ற தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடித்த கொள்ளையன் ரிஷாட் பதியூதீன் என, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்தார்.
மேலும், வன்னியில் காணப்படுகின்ற மக்கள் ரிஷாட் பதியூதீனால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறும், கேட்டுக்கொண்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி ஊடக மையத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்தரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ,
ரிஷாட் மற்றும் அவருடைய சகோதரன் ரிவ்கானும் தமிழ் மக்களை அடக்கு ஒடுக்கி வாழ்ந்த வரலாறு இருக்கின்றதெனத் தெரிவித்ததோடு, வன்னி மண் தமது மண் எனவும் தமிழ் மண்ணை இனியும் உங்களுக்கு தாரைவார்த்து கொடுக்க முடியாதென்றும் தெரிவித்தார்.
அத்துடன், வன்னி மக்கள் ரிஷாட் பதியூதீனால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்பு கொள்ளுமாறும் அதற்கான தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றும் கூறினார்.
வன்னியில் தமிழ் மக்கள் ரிஷாட்டினால் ஒடுக்கப்பட்டிருந்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகத் கூறினார்.


