அஜித் ரோஹணவுக்கு பதிலாக புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்

புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, இன்று (16) முற்பகல் வரை பொலிஸ் ஊடக பேச்சாளராக பணியாற்றினார்.

இந்த நிலையில், பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவினால் இன்று (16) புதிய பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply