கிண்ணியா – ஆலங்கேணியில் தானியார் காணி ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
அதன்படி, நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீ பள்ளயத்துக்கு குழி (தீ மிதிப்பு) ஒன்றை வெட்டும் போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது
இச் சம்பவம், தனியார் ஒருவருக்குச் சொந்தமான பத்தரகாளியம்மன் கோயில் வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளது
காணி உரிமையாளர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து பொஸாருக்கு அறிவித்துள்ளார்
இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் SFG – 87 ரக
கைக் குண்டை மீட்டுள்ளனர்.
மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெற்று – செயலிழக்கும் விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவியை நாடியுள்ளதாத கூறுகின்றனர்.
இதேவேளை, தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்


