<!–
நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
நாடாளுமன்றில் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து இந்த வார பாராளுமன்ற கூட்டங்களை இடைநிறுத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


