கொழும்பின் பிரபல பாடசாலை மாணவன் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு!!

கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த 18 வயது மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – 5 பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவர் உயர் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளதாக தெரியவருகிறது.

அவருக்கு கடந்த 10ஆம் திகதி கோவிட் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 14ஆம் திகதி கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் அவருக்கு நோய் தொற்றானது தீவிரமடைந்ததை அடுத்து குறித்த மாணவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply