வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இலங்கையில் கொவிட் டெல்டா திரிபு காரணமாக நாளாந்தம் 150திற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்ற நிலையிலேயே, அரசாங்கம் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை பிறப்பிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தார்.
அத்தோடு , நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அனைத்து விதமான ஒன்று கூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


