முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கண்டியில் அமைந்துள்ள குறித்த முதியோர் இல்லத்தில் இதுவரை 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை மற்றைய நபர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த முதியோர் இல்லத்தில் 63 பேர் வசித்து வருவதாக கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.


