இதுவரை 2,800 கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று!

நாட்டில் இதுவரை 2,800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக குடும்பநல சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொவிட் தொற்று உறுதியான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் மட்டும் 1,819 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply