வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில் தானியார் காணி ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தானியார் காணி ஒன்றில் குழி வெட்டும் போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

தனியார் ஒருவருக்குச் சொந்தமான பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்திலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

காணி உரிமையாளர் குண்டு கிடப்பதைக் கண்டு பொஸாருக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் SFG – 87 ரக கைக் குண்டை மீட்டுள்ளனர்.

குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெற்று – செயலிழக்கும் விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ள கிண்ணியா பொலிஸார், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply