167 பேர் கொரோனா தொற்றால் மரணம்- GOMA முன்வைக்கும் குற்றச்சாட்டு

இலங்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 167 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு , நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,263 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரிய முறையில் செயற்படுத்தப்படாமையின் விளைவாகவே தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்தார்.

Leave a Reply