யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரும் வரை சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.
குறித்த சந்தையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று கொரோனா பரிசோதனையில் சுமார் 30 பேர் வரையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே சந்தை தொகுதியை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


