பேய் விரட்டிய கும்பல்- சம்பவ இடத்தில் குவிந்த பொலிஸ்

அம்பாறை – மாயாதுன்ன பிரதேசத்தில் பேய் விரட்டிய சடங்குகளை மேற்கொண்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பேய் விரட்டும் சடங்குகளை வீடொன்றில் சாமியார் உள்ளிட்ட 10 பேர் செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டதிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளனர்.

அத்துடன், சாமியார் உள்ளிட்ட 10 பேரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் அம்பாறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply