குடும்பத்தகராறில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – வல்வெட்டியில் இன்று (17) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயம் அடைந்த வேளை குறித்த நபர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த போதிலும் சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


