ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் – புதிய கல்வி அமைச்சர் உறுதி

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை கலந்துரையாடல் ஊடாக தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக புதிய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சராக நேற்று போறுப்பேற்ற தினேஸ் குணவர்தன, எல்லே குணவங்ச தேரரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு போன்று ஒவ்வொரு அமைச்சின் பணியும் கடினமானதாகவும் சகோதர அமைச்சர்கள் மற்றும் ஜனாதியுடன் இணைந்து இந்த சவாலையும் தேசியப் பணியையும் நிறைவேற்ற தாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைகள்தான் இந்நாட்டின் எதிர்காலம் என்றும் அதை ஆழமாக புரிந்துகொண்டு செயற்பட தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கலந்துரையாடல்கள் மூலம் ​​ஆசிரியர்களின் பிரச்சினையை கையாள்வோம் எனவும் புதிய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply