பள்ளிவாசல்களில் தொழுகைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு, பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு நேற்று (16) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு பள்ளிவாசல் தொழுகைகள் தொடர்பில், இலங்கை வக்பு சபையினால் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, பள்ளிவாசல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அதிகபட்சம் 25 நபர்கள் மட்டுமே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

ஐவேளை ஜமாஅத் தொழுகை, ஜும்ஆதொழுகை, ஜனாஸாதொழுகை, அல்-குர்ஆன், நிகாஹ் மஜ்லிஸ்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்து கூட்டு செயற்பாடுகளையும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என வக்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply