பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரவெட்டி இராஜகிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது-78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு இன்று (17) காலை தகவல் வழங்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நபர் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜகிராமம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளது.
குறித்த நபர் நேற்று (16) இரவு அவ்விடத்திலிருந்து சத்தமாக பாடல்களை பாடிக்கொண்டு இருந்ததாகவும், காலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


