நாட்டில் கொரோனா தொற்றும் , உயிரிழப்புக்களும் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதையும் ஒரு மாதத்திற்கு முடக்கம் செய்ய அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார இறுதியில் பெரும்பாலும் முழுநேர தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் டெல்டா தொற்றின் துரித வேகப்பரவலை நிறுத்தும்படி நாட்டை முடக்கம் செய்யும்படி சுகாதாரத்தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.
Advertisement
இந்நிலையில் பொதுமுடக்கமொன்றை அறிவிக்க அரசாங்கம் பேச்சு நடத்திவருவதாகவும், பெரும்பாலும் இந்த வார வெள்ளிக்கிழமையில் விசேட அறிவிப்பொன்று வெளிவரலாம் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.


