
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடையில் உள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தொகுதிக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் உட்பட 12 பேரை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பற்றியமைக்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.

