திடீரென மயங்கி விழுந்தவர் மரணம்- வவுனியாவில் சம்பவம்

Death In Karachi:
KARACHI, PAKISTAN – October 19 : A dead body is wrapped in plastic after being washed at the Edhi Morgue where many bodies were kept after a bomb blast killed atleast 150 during a failed assasination attempt on former Pakistani Prime Minister Benazir Bhutto’s parade October 19, 2007 in Karachi, Pakistan. Bhutto returned from self-imposed exile after eight years and was later killed during a campaign rally on December 28,2007..

வவுனியா-ஓமந்தை பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என மயங்கிவிழுந்த நிலையில் மணரமடைந்துள்ளார்.

குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஓமந்தை பாலமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.

எனினும், அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மணரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இவ்வாறு உயிரிழந்தவர், வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியை செர்ந்த சதாசிவம் ரவிக்குமார் என்ற 54 வயதான குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட றபிட் அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply