தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(17) அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் தன்னுடன் அண்மைய நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


