பருத்தித்துறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பருத்தித்துறை- சுப்பர் மட பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நெல்லியடி- கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை- சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம்  கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்த்து சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தப்போது, நெல்லியடி- இராஜ கிராமம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் பிரேத பரிசோதனைக்காக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply