ஒரு தொற்றாளர் ஆறு சுகதேகிகளுக்கு தொற்றினை பரப்ப முடியும் – வைத்தியர் ஆதவன்

டெல்டா தொற்று முன்னதாக இனங்காண பண்பட்ட கொரோனா வைரஸை விட இருமடங்கு அதிகமாக பரவக்கூடியது.

இதனால் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு தொற்றாளர் ஆறு சுகதேகி மனிதர்களுக்கு தொற்றினை பரப்பக்கூடிய அபாயநிலை காணப்படுகிறது என வைத்தியர் ஆதவன் தெரிவித்துள்ளார்.

இன்று (17) யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டெல்டா வைரஸ் திரிபு நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது.

முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை விட, டெல்டா வைரஸ் ஏறத்தாழ இரண்டு மடங்கு வீரியத்துடன் பரவக்கூடியது.

இதனால் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு தொற்றாளர் ஆறு சுகதேகி மனிதர்களுக்கு தொற்றினை பரப்ப முடியும்.

15 பேருள்ள ஒரு குழுவில் அதிகமாக 13 பேருக்கு தொற்று ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது.

டெல்டா தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க வீட்டிலிருந்து தேவையற்ற விடயங்களின் பொருட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

ஆலய உற்சவங்கள், சுபநிகழ்வுகள், ஒன்றுகூடல்களை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றார்.

Leave a Reply