யாழிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – மனோகரா சந்திக்கு அருகிலுள்ள இலத்திரனியல் சாதனங்கள் திருத்தும் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேல் மாடியிலேயே குறித்த வர்த்தக நிலையம் அமைந்துள்ளது.

தீயணைப்புப் படையின் விரைவான செயற்பாட்டினால் கீழுள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்படாத வகையில் தீ கட்டுக்குள் காணடு வரப்பட்டுள்ளது.

என்னும் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் என்பன முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

மின்னொழுக்கு காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என உரிமையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்கிரையான பொருட்களின் பெறுமதி சுமார் 20 இலட்சத்தை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply