இலங்கையில் மூன்று விதமான டெல்டா திரிபுகள் இதுவரை அடையாளம்- சன்ன ஜயசுமன்ன

இலங்கையில் மூன்று விதமான டெல்டா திரிபுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

மேலும் நாட்டிற்குள் தற்போது டெல்டா வைரஸானது, 60 முதல் 70 வீத வேகத்தில் பரவி வருகின்றமையை, விசேட நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினர்.

பல்வேறு நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்ற மற்றும் ஒக்சிஜனுடன் போராட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும் வீரியம் கொண்ட வைரஸ் இதுவென அவர் குறிப்பிடு்கின்றார்

இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டாவின் மூன்று வகை திரிபுகளினாலேயே, பாதிப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும் இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

இலங்கையில் பரவுகின்ற டெல்டா தொற்றின் மேலும் 03 வகையிலான திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. S.A.222-V, S.A. 701-S, S.A 1078-S என்ற மூன்று திரிபடைந்த தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ்தொற்று வேகமாகப் பரவுவதற்கும் இந்த திரிவுகளே காரணமாகியிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். தடுப்பூசி வழங்கலை வேகப்படுத்தி தொற்று பரவுவதைத் தடுத்தல் மற்றும் மரணங்களைக் கட்டுப்படுத்தவே எதிர்பார்த்திருந்தோம். 219 இலட்சம் மக்களில் 119 இலட்சம் மக்களுக்கு அதாவது 54 வீத மக்களுக்கு ஒரு தடுப்பூசியேனும் அளிக்கப்பட்டுவிட்டன. அவர்களில் 46 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசியையும் அளிக்கப்பட்டுவிட்டன. 26 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசியையும் அளித்திருக்கின்றோம். 30 வயதைக் கடந்தவர்களுக்கு 40 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply