கொரோனா தொடர்பில் நீரிழிவு நோயாளர்கள் அவதானம் தேவை

நீரிழிவு நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும் என வைத்தியர் எம். அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (17) யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று இன்னும் எத்தனை வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என கூற முடியாது.

கொரோனா போன்ற தொற்று நோய்களை கவனத்திற் கொள்வது போல தொற்றா நோய்கள் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும்

தொற்றா நோய்களில் முக்கியமானவை நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், இருதயநோய்கள், சுவாச நோய்கள் போன்றனவாகும்.

நீரிழிவு நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும்.

யாழ். மாவட்டத்தை பொறுத்த வரையில் 15 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றா நோய்களை கவனிக்காதவிடத்து பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும்.

தொற்றாநோய் உள்ளவர்கள் அந்நோய் நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வர முடியாதவிடத்து வீட்டிற்கு அருகிலுள்ள பிராந்திய வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த கொரோனா காலப்பகுதியில் தொற்றா நோய்கள் உடையவர்கள் மட்டுமல்லாது அனைவரும் உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

Leave a Reply