ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் 11 ஊழியர்களுக்கு கொரோனா

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் 11 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் இதனையடுத்து அவர்களுடன் தொடர்பை பேணிய 50 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் இந்தநிலையில், அவர்களில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் 50 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இதனையடுத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறைந்தளவான வர்த்தகர்களே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply