காரைநகர் பகுதியில் 513 வது படைப்பிரிவினரால் குடிதண்ணீர் வழங்கி வைக்கப்பட்டது

பாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம்) மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் கீழ் காணப்படுகின்ற 513 வது படைப்பிரிவிற்குச் சொந்தமான 11 வது இலங்கை காலாட் படைணியினரால் காரைநகர் தீவுப் பகுதியில் உள்ள மருதபுரம், கோவளம், கலாபூமி, பாலவோடை மற்றும் பழக்கடை ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலும் குறித்த வேலைத்திட்டமானது அப்பிரதேச மக்களினுடைய வேண்டுகோளுக்கு அமைவாக 51 வது காலாட் படைப்பிரிவின் சேனாதிபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply