உச்சம் கண்ட எண்ணிக்கை- ஆண்களே அதிக பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று திங்கட்கிழமை மேலும் 171 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன்,30 வயதுக்குக் கீழ் 2 பேர் மரணித்துள்ளார்.

அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6,434 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் மேலும் 3,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,325 பேர் குணமடைந்துள்ளதோடு, 314,507 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply