கிண்ணியா நகரமும் முடக்கப்பட்டது!

திருகோணமலை-கிண்ணியா பிரதேசமும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – கிண்ணியா பிரதேச மற்றும் நகரசபை எல்லைப்பகுதிகளில் உள்ள அத்தியவசியத் தேவையான மரக்கரி, மீன், இறைச்சி பலசரக்கு கடைகள், பேக்கரி, மருந்தகம் தவிர ஏனைய அனைத்து கடைகளையும் இன்றிலிருந்து புதன்கிழமை (18) இரு வார காலம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம். எச். எம். ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற நடைபெற்ற கிண்ணியா பிரதேச கொரோனா கட்டுப்பாட்டு குழுவின் தீர்மானத்துக்கு இனங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இதற்கு சகல வர்த்தகர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் கிண்ணியா மாலிந்துரை கிராமத்தை சேர்ந்தவர் எனவும் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதகாரி பிரிவில் கொரோனா தொற்றுடன் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருக்கின்றது.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து நேற்று 21 பேருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் படி ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்கள் மாஞ்சோலைச்சேனை கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கொரோனாவின் 3 வது அலையின் பின்னர் இதுவரைக்கும் 500 தொற்றாளர்கள் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே மக்கள் மிக்க அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் சுகாதார நடைமுறைகளை பேணி அத்தியவசியத் தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நேற்று திருகோணமலைப் பகுதியிலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply