மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பில் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் இன்று (புதன்கிழமை) காலை மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போதே மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த 26 வயதுடைய முருகையா சசிகுமார் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து, குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply