சமையல் எரிவாயு தட்டுப்பாடு – ஒன்லைனில் விறகு விற்பனை!

இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு வர்த்தகத்தை முன்னெடுக்கும் இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ஆங்கிழ ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒரு மண் அடுப்பும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாத இணையத்தளத்தின் தலைவர் தனது முகநூல் பக்கத்தில், விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என கற்பனைகூட செய்யவில்லை என்றும் இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

நாடு உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், 1000 க்கும் மேற்பட்ட விறகு மூடைகளை விற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply