வாய்,மூக்கால் இரத்தம் வடிந்து கீழே விழுந்து உயிரிழந்த நபர்!

இந்தியாவைப் போன்று இலங்கையும் மாற்றம் அடைவதாகவே தற்கால சூழ்நிலையில்,மக்கள் பேசுபொருளாக கொண்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று அதி தீவிரமடைந்துள்ளது.

கொரோனா நோயாளிகள் வைத்தியசாலையில் மட்டுமின்றி, வீடு, வீதி, பேரூந்து, என நிற்கும் இடங்களில் செத்து மடிகின்றனர்.

இந்நிலையில், விஸ்வமடு – றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு, இன்று புதன்கிழமை காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, விஸ்வமடு – வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று; பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சமரகோன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், விறகு வெட்டிக்கொண்டிருந்த நிலையில், வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply