சமூக வலைத்தளங்களில், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்துவிட்டார் என செய்திகள் பரவியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மங்கள சமரவீர ,தற்போது தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது.
எனினும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


