ராகம வைத்தியசாலையில் தொடரும் அவலம்

ராகம வைத்தியசாலையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த முகமது ஜனன் என்ற மருத்துவர் இன்று புதன்கிழமை (18) காலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா நோயால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.

ராகம வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை பிரிவில் கடமையாற்றிய 34 வயதான வைத்தியரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அத்துடன், கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேற்படி வைத்தியர், அவசர சிகிச்சைப் ​பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு சிகிச்சைப்பெற்றுவந்தார்.

மேலும், இன்றுக் காலை மரணமடைந்த குறித்த வைத்தியர், கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக்கொள்ளாத ஒருவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply