ஆப்கான் மக்களுக்கு அடைக்கலம் வழங்க பிரித்தானியா திட்டம் : முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் பயனடைவர் என அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக  பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி அடுத்து வரும் வருடங்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக 5000 பேரை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் தலிபான்களிடம் இருந்து தப்பி வெளியேறும் ஆப்கான் மக்களுக்கு உதவி செய்வதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ்  அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply