
9 மில்லியன் டோஸ் சினோஃபார்ம் மற்றும் 14 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசிகளை அலகு விலையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதியிலிருந்து தடுப்பூசி வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தேவைகளுக்காக அமைச்சரவை அமைச்சர்களால் நியமிக்கப்பட்ட கலந்தாய்வுக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் 14 மில்லியன் மக்களுக்கு ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டது.
ஓக்ஸ்ட்ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 19.49 மில்லியன் தடுப்பூசிகளை நாடு பெற்றது. அதில், 11.26 மில்லியன் முதல் டோஸாகவும் 3.25 மில்லியன் இரண்டாவது டோஸாகவும் பயன்படுத்தப்பட்டன.

