இன்று முதல் வீட்டிலிருந்து ஒருவரே வெளியே செல்லலாம்! அதிரடி மாற்றம்

சற்றுமுன் சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய தேவைக்காக இன்று முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அனைத்து உடற்பிடிப்பு மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்புகள் மற்றும் அறநெறி பாடசாலைகள் நடத்துவதனை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார வழிகாட்டியில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

எனவே கொரோனா பரவலை கருத்திற் கொண்டு அனைவரையும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

Leave a Reply