குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
மேலும் மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு தெல்கொட பகுதியைச் சேர்ந்த இந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ராகம – வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
41 வயதான குறித்த வைத்தியர், எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன


