வவுனியா வடக்கில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று..!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பிரதேச செயலாளர் மற்றும் சிலருக்கு நேற்றைய தினம் சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையிலையே பிரதேச செயலாளர் உட்பட மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் பிரதேச செயலகத்தில் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து இன்றைய தினம் குறித்த கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையிலும் இருவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply