யாழில் நடந்த சம்பவம்-தமிழ்களை அடிமைப்படுத்த சிங்கள பேரினவாதம் சதி?

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50 மணியளவில் பொன்னாலை மேற்கு கிராமத்திற்குள் படையினர் புகுந்து அப்பாவி மக்களை அச்சுறுத்தியமை தொடர்பில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.50 இற்கு பொன்னாலை மேற்கு கிராமத்திற்குள் படையினர் புகுந்து அப்பாவி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

பல வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி சோதனையிட்டு அச்சுறுத்திஉள்ளனர்.அத்தோடு பெண்களுக்கு கல்லால் எறிந்து இருக்கின்றனர்.இந்த செய்ற்பாட்டின் காரணமாக கிராமம் முழுமையாக மரணபயத்தில் உறைந்து இருக்கின்றது.

படையினருடைய இந்த காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னனியினராகிய நாங்கள் வன்மையாக கண்டிங்கின்றோம்.

இது தொடலர்பாக ஒரு முழுமையான விசாரனை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிந்து12 வருடகாலப்பகுதிக்கு பிற்பாடும் சிங்கள பொளத்த பேரினவாதப்படைகள் தாங்கள் எங்களை அடிமைப்படுத்தி வைப்பதை ஞாபகப்படுத்துவதற்காக முயல்கிறார்களா என்ற கேள்வி தான் இந்த இடத்தில் எழுகின்றது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றது.பொலிசார் முறைப்பாட்டை எடுப்பதற்கு பின்னடித்து இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசா அவர்களினால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.இவ்வாறு சம்பவ இடத்திற்கிற்கு செல்கிறேன் உடனியாக வாருங்கள் என கூறி சென்றதன் பிற்பாடும் அவர்கள் வரவில்லை.

பின்னர் அவரின் கடுமையான வற்புறுத்தலைத்தொடர்ந்து பொலிசார் அந்த இடத்திற்கு வருகை தந்தனர்.எப்படியாவது இதனை சமாளித்து குற்றவாளிகளை பாதுகாத்து விடுவோம் என்று பொலிசார் உறுதியாக இருப்பதாக உணரக்கூடியதாக இருக்கின்றது.

எந்த சந்தர்பத்திலும் குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது.தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.என அவர் கூறியிருந்தார்.

Leave a Reply