ருக்அத்தனகொட, நாகொடை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மகளை தாக்கி கொலை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு செவ்வாய்க்கிழமை 9 மணி அளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 33 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு தந்தை தினமும் குடிபோதையில் இருப்பவர் எனவும் குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தந்தையான 63 வயதுடைய நபர் நாகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


