உச்சம் தொடும் கொரோனா மரணம்- மேலும் 170 பேர் பலி!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றால் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 2ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா வைரஜ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368,111 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply